Categories
வானிலை

அடுத்த 24 மணி நேரத்தில் ….5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு….!!!

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக  சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் அறிவித்துள்ளார்.

சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் புவியரசன் செய்தியாளர்களை சந்தித்தபோது:-

வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட  5 மாவட்டங்களில் பலத்த பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், மேலும்  ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய கூடும். அக்டோபர் மாதம்  முதல் தற்போது வரை தமிழகத்திற்கு வழக்கத்தைவிட கூடுதலாக மழை கிடைத்துள்ளது.

என்று அவர் கூறினார்.

Categories

Tech |