Categories
தேசிய செய்திகள்

“போஸ்ட் ஆபிஸில் சூப்பர் திட்டம்”…. 5 லட்சம் முதலீட்டில் 6.94 லட்சமாம்…. இதோ முழு விபரம்….!!!

தற்போது கொரோனா தொற்று காரணமாக பொதுமக்கள் பொருளாதார இழப்புகளை எதிர்கொண்டு வருகின்றனர். இதனால் பொதுமக்கள் தொடர்ந்து வருவாயை பெறுவதற்கு பாதுகாப்பான முதலீட்டில் கவனம் செலுத்த தொடங்கின. இந்நிலையில் இந்திய அஞ்சல் துறை பல்வேறு சேமிப்பு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இத்திட்டங்களில் இணைவதன் மூலம் பாதுகாப்பான முறையில் நல்ல லாபம் பெற முடியும். இதில் தற்போது தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டம் பற்றி விரிவாக காணலாம். இந்த திட்டத்தில் பிரதமரான மோடி முதலீடு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்திட்டத்தின் lock-in காலம் 5 வருடங்கள் வரை ஆகும். இந்த 5 வருடங்கள் வரை பணத்தை எடுக்க முடியாது. இந்த திட்டத்தில் தனிநபர் கணக்கு மற்றும் கூட்டு கணக்கை தொடர முடியும். மேலும் தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டத்தில் வருடத்துக்கு 6.8% வட்டி கிடைக்கிறது. இதில் ரூ.1000 முதலீடு செய்தால் 5 வருடங்களின் முடிவில் ரூ.1359.49 ரூபாய் கிடைக்கிறது. அதன்படி ரூ.1 லட்ச ரூபாய் முதலீடு செய்தால் 5 வருடங்களின் முடிவில் ரூ.1.38 லட்ச ரூபாய் கிடைக்கிறது. இந்த திட்டத்தில் அதிகபட்சமாக முதலீடு செய்வதற்கு எந்தவொரு வரம்பும் இல்லை.

அதன்படி ரூ.5 லட்ச ரூபாய் முதலீடு செய்தால் 5 வருடங்களின் முடிவில் ரூ.6.94 லட்ச ரூபாய் வரை கிடைக்கிறது. ஒவ்வொரு வருடத்துக்கும் கூட்டு வட்டி கணக்கிடப்பட்டு மெச்சூரிட்டி காலம் முடியும் போது முதலீட்டாளர்களிடம் வழங்கப்படுகிறது. இதன் காரணமாக சிறு, நடுத்தர சேமிப்புகளுக்கு தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டத்தில் இணைந்து பயனடைந்து கொள்ளலாம். குறைந்தபட்சம் முதலீடாக 1000 ரூ முதல் செலுத்தலாம் என்பதால் நடுத்தரவர்க்கத்தை சேர்ந்த மக்கள் மத்தியில் தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டம் மிகுந்த வரவேற்பை பெற்று இருக்கிறது.

Categories

Tech |