உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் முதலில் தென்னாப்பிரிக்காவில் கடந்த மாதம் 24-ஆம் தேதி கண்டறியப்பட்டது. அதன் பின்னர் உலக நாடுகளிடையே வேகமாக இந்த வைரஸ் பரவி வருகிறது. இந்த நிலையில் இந்தியாவில் இந்த வைரஸ் பரவலை தடுக்க விமான நிலையங்களில் தீவிர கண்காணிப்பு நடைபெற்று வருகிறது. மேலும் ஆபத்தான நாடுகள் என கண்டறியப்பட்டுள்ள ஆப்பிரிக்க நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து வருகிற அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது. அதில் கொரோனா உறுதியானால் அது ஒமைக்ரானா என கண்டறிய மாதிரிகள் மரபணு வரிசைப்படுத்தல் பரிசோதனைக்காக மரபணு பகுப்பாய்வு கூடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. உலக மக்களை அச்சுறுத்தி வருகின்ற ஒமைக்ரான் வைரஸ் இந்தியாவில் கடந்த 2-ஆம் தேதி தொடங்கியது.தற்போது பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 415 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதன்படி மராட்டியத்தில் 108,டெல்லியில் 79,குஜராத்தில் 43,தெலுங்கானாவில் 38,கேரளாவில் 37,தமிழ்நாட்டில் 34,கர்நாடகத்தின் 31, ராஜஸ்தானில் 22, ஹரியானாவில் 4, ஒடிஷாவில் 4 ,ஆந்திராவில் 4 ,மேற்கு வங்காளத்தில் 3 , காஷ்மீரில் 3 ,உத்தர பிரதேசத்தில் 2,சண்டிகரில் 1, லடாக்கில் 1 , உத்தரகாண்டில் 1 என்று மொத்தம் 415 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
Categories
OMICRON: இந்தியாவில் ஜெட் வேகத்தில் உயரும் பாதிப்பு…. மத்திய சுகாதாரத் துறை வெளியிட்ட தகவல்….!!!!
