கால்வாயில் மணலை திருடும் மர்ம நபர்களை கைது செய்ய கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மதுரை மாவட்டத்தில் உள்ள ஆத்திபட்டி, குடிசேரி , சலுப்பட்டி, தொட்டனம்பட்டி, வீராளம்பட்டி, மங்கல்ரேவு, பெரியபூலாம்பட்டி, கல்லுப்பட்டி மற்றும் வண்ணிவேலம்பட்டி போன்ற கிராம மக்களுக்காக ராமசாமிபுரம் பகுதியில் பொதுப்பணி துறைக்கு சொந்தமான கால்வாயில் தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. அந்தக் கால்வாயில் சில மர்ம நபர்கள் மண்ணை திருடியதால் பாலம் சேதமடைந்து காணப்படுகிறது .
இதனால் கோபம் அடைந்த பொதுமக்கள் மணல் கடத்தலில் ஈடுபடுபவர்களை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மூக்குச்சாலை பகுதியில் திடீரென ஆட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இதுகுறித்து தகவலறிந்த தாசில்தார் ரவிச்சந்திரன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அப்போது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்த பிறகு பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர். இதனால் அப்பகுதியில் சுமார் 4 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.