Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

போதிய வசதி இல்லை…. பொதுமக்கள் சாலை மறியல்…. தற்காலிகமாக நிறுத்தி வைப்பு….!!

சுங்க சாவடிகளில் கட்டணம் வசூலிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வி.கூட்டு ரோட்டிலிருந்து விருதாச்சலம் வரை தேசிய நெடுஞ்சாலை அமைந்திருக்கிறது. இதில் கீழ்குப்பத்தில் அமைக்கப்பட்டு இருக்கும் சுங்கச்சாவடியில் முதல் கட்டணம் வசூலிக்கும் பணியை தொடங்கியுள்ளனர். இந்நிலையில் இதை அறிந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துச் சுங்கச்சாவடியின் முன்பாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயற்சி செய்துள்ளனர்.

இதனை அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். அப்போது அவர்கள் வி.கூட்டுரோட்டில் இருந்து விருதாச்சலம் வரையிலான சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக இருப்பதால் இதில் தினசரி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. இதனை அடுத்து சுங்கச்சாவடியில் இருசக்கர வாகனங்கள் செல்ல தனி வழி எதுவும் இல்லை, ரெக்கவரி மற்றும் ஆம்புலன்ஸ் வாகனம் வசதி, வாகனங்கள் நிறுத்துமிடம் என்று எந்த ஒரு வசதிகளும் இல்லாத நிலையில் இருக்கிறது.

இதனை தொடர்ந்து இங்கே கட்டணம் வசூலிக்க வழங்கிய அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என கூறி மனு ஒன்றை காவல்துறையிடம் அவர்கள் அளித்துள்ளனர். மேலும் அந்த மனுவை பெற்று கொண்ட காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளனர். மேலும் இதற்கிடையில் தற்காலிகமாக சுங்கச்சாவடி கட்டணம் வசூலிக்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

Categories

Tech |