கரூர் மாவட்டத்தை சேர்ந்த அரசு பள்ளி ஒன்றில் அழுகிய முட்டைகள் இருந்தது தொடர்பாக 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் .
தமிழகத்தில் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு மதியம் சத்துணவு வழங்கப்படுவது வழக்கம். இந்த சத்துணவில் மாணவ மாணவியர்களுக்கு ஊட்டச்சத்து அளிக்கும் வகையில் முட்டை வழங்கப்பட்டு வருகின்றது. சிலசமயங்களில் முட்டை சாப்பிட்ட குழந்தைகள் வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கும் சூழலும் உருவாகின்றது.
இந்நிலையில் கரூர் மாவட்டம் குளித்தலை அரசு பள்ளியில் அழுகிய முட்டைகள் இருந்தது தொடர்பாக 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர், சத்துணவு அமைப்பாளர், சமையலர் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.