Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

புரியாமல் நின்ற பயணிகள்…. முன்னறிவிப்பு இல்லை…. பேருந்தில் அலைமோதிய கூட்டம்….!!

முன்னறிவிப்பு எதுவும் இன்றி ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால் பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள முகுந்தராயபுரத்திருந்த திருவலம் செல்லும் ரயில் நிலையங்களுக்கு இடையே பொன்னையாற்று பாலத்தின் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டு இருக்கிறது. இதை சரி செய்வதற்கான பணியில் ரயில்வே ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதன் காரணத்தினால் சென்னை சென்ட்ரலில் இருந்து ஜோலார்பேட்டை பகுதிக்கு புறப்பட்டு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில், சென்னை கடற்கரையில் இருந்து புறப்பட்டு வேலூர் கண்டொன்மென்ட் செல்லும் மின்சார ரயில் மற்றும் அரக்கோணத்தில் இருந்து புறப்பட்டு ஜோலார்பேட்டை வரை செல்லும் மின்சார ரயில்கள் அனைத்தும் முன்னறிவிப்பின்றி திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதனை அடுத்து பணியை முடித்து விட்டு வீடு திரும்பும் பயணிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் காட்பாடி மற்றும் வேலூர் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பயணிகளும், அலுவலக ஊழியர்களும் மின்சார ரயில்கள் மூலமாக அரக்கோணம் வந்து அங்கிருந்து பேருந்து மூலமாக வேலூர் மற்றும் காட்பாடி ஆகிய பகுதிகளுக்கு செல்கின்றனர்.

இதனை தொடர்ந்து 500-க்கும் அதிகமான நபர்கள் பேருந்து நிலையத்திற்கு வந்ததால் போதிய பேருந்து வசதி இல்லாமல் பயணிகள் சோளிங்கர் வரை செல்லும் பேருந்தில் முண்டியடித்து ஏறி சென்றுள்ளனர். இதில் பேருந்தில் பல பயணிகளுக்கு இடமில்லாததால் செய்வதறியாமல் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தனர். மேலும் பல ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

Categories

Tech |