ஒமைக்ரான் பரவல் தொடர்பாக தமிழகம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மத்திய சுகாதாரம் குழு ஆய்வு செய்ய வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உருமாற்றம் பெற்றுள்ள ஒமைக்ரான் தொற்று இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் தீவிரமாக பரவி வருவதால் சுகாதாரம் மற்றும் உள்துறை அமைச்சகம் அதிகாரிகள் பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை மேற்கொண்டனர். இந்த ஆலோசனையின் பொழுது தடுப்பூசி குறைவாகத் செலுத்தியுள்ள மாநிலங்கள் மற்றும் ஒமைக்ரான் பாதிப்பு அதிகமுள்ள மாநிலங்களில் மத்திய குழுவினை அனுப்ப பிரதமர் மோடி அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.
இந்நிலையில் தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்களில் மத்திய சுகாதார துறை அனுப்பப்படுவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகம், கேரளா, கர்நாடகா, பீகார், மிசோரம், உத்தரப் பிரதேசம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் இந்த குழு முதற்கட்டமாக அனுப்பப்படுகின்றது. இந்த குழு மாநில சுகாதார துறை அதிகாரிகளுடன் இணைந்து தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரப்படுத்துவது தொடர்பாகவும், ஒமைக்ரான் பரவலை தடுப்பதற்கு தேவையான ஆலோசனைகளையும் மேற்கொள்ளும். மேலும் இந்த குழு மூன்று முதல் நான்கு நாட்கள் ஆய்வு செய்யும் மாநிலங்களில் தங்கி இருந்து மத்திய அரசுக்கு தினந்தோறும் மாலை 7 மணி அளவில் அந்தந்த மாநிலங்கள் செய்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.