சட்ட விரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை கைது செய்த காவல்துறையினர் கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் காவல்துறையினர் அத்திப்பலகானூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ரயில்வே மேம்பாலம் அருகே ஒரு நபர் கையில் பையுடன் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்துள்ளார். இதனை பார்த்த காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர் அவர் கார்கூடல்பட்டியை சேர்ந்த ராஜேந்திரன் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவரிடம் 150 கிராம் கஞ்சா விற்பனை செய்யவதற்காக வைத்திருந்தது தெரியவந்துள்ளது. அதனை பறிமுதல் செய்த காவல்துறையினர் ராஜேந்திரனை கைது செய்துள்ளனர்.
இதேபோல் கோனேரிப்பட்டி சுடுகாடு அருகே ஒரு நபர் கஞ்சா விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலறிந்து சென்ற சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் காளியப்பன் மற்றும் காவல்துறையினர் அவரை பிடித்து விசாரித்ததில் அவர் கார்கூடல்பட்டி சேர்ந்த கூலித் தொழிலாளியான சுரேஷ்குமார் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவரை கைது செய்து அவரிடம் இருந்த 500 ரூபாய் மதிப்புள்ள 150 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்துள்ளனர்.