2020-2021 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்ய கடைசி தேதி டிசம்பர் 31-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதற்கு முன்னதாக ஜூலை 31 மற்றும் செப்டம்பர் 30 என இரண்டு முறை நீட்டிக்கப்பட்டு தற்போது மூன்றாவது முறையாக டிசம்பர் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வருமான வரி தாக்கல் செய்தவர்களுக்கு இனி ரீ-பண்ட மறுநாளே கிடைக்கும் என்று அரசு தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது. வருமான வரி தாக்கல் செய்தவர்கள் இனி ரீ-பண்டுக்காக மாதக்கணக்கில் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. மறுநாளே ரீபண்ட் உங்களுடைய கணக்கில் வரும் வகையில் புதிய மென்பொருள் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் நடைமுறைக்கு வரும்போது அதன் உண்மையான பலன் வரி செலுத்துவதற்கு கிடைக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.