Categories
மாநில செய்திகள்

அடக்கடவுளே…! தினமும் ரசம் வைத்ததால் கொலை…. பரபரப்பு தீர்ப்பு…!!!!

வீட்டில் தினமும் சாப்பாட்டிற்கு ரசம் வைத்ததால் மனைவியை கொன்றதாக கூறிய கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது .

கண்ணன் என்பவருடைய மனைவி சிவஞான செல்வி. இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது. தினமும் குடித்துவிட்டு வரும் கண்ணன் தனது மனைவியிடம் கார குழம்பு வைக்க வேண்டும் என்று கூறி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்தநிலையில் குடிபோதையில் வந்த கண்ணன் சம்பவத்தன்று தன்னுடைய மனைவியை கொலை செய்துள்ளார்.

இந்த வழக்கில் சாப்பாட்டிற்கு தினமும் ரசம் வைத்தால் மனைவியை கொன்றதாக கூறிய கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் தாயை இழந்த இரண்டு குழந்தைகளுக்கும் அரசு நிவாரணம் வழங்கவும் பரிந்துரை செய்துள்ளது.

Categories

Tech |