மக்கள் முழு ஒத்துழைப்பை தர வேண்டும் என்று முதல்வர் முக ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர் தெரிவித்துள்ளதாவது: “கொரோனா, ஒமைக்ரான் தடுப்பு நடவடிக்கையாக மக்கள் கூட்டம் கூடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரும்போது கட்டாயம் முக கவசம் அணிந்து இருக்க வேண்டும். தடுப்பு முகாம்களுக்கு சென்று தவறாமல் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். அனைத்து கடைகள் மற்றும் வணிக வளாகம் திரையரங்குகளில் வழங்கிய நடைமுறையை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகளை உரிய கட்டுப்பாடுகளுடன் தொடரலாம். கொரோனா, ஒமைக்ரான் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் மக்கள் நலன் கருதி அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும்” என்று முதல்வர் முக ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.