சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன் இருந்ததைவிட தற்போது பூமி வேகமாக சுழன்று கொண்டிருக்கிறது என்று விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.
சூரியனை ஒரு தடவை பூமியை சுற்றிவர 365 நாட்கள் ஆகிறது. அதை தான் ஒரு ஆண்டாக கணக்கிடுகிறோம். பூமி பல மில்லியன் வருடங்களுக்கு முன் வேகமாக சுழன்றிருக்கிறது. அந்தக் காலக்கட்டங்களில் ஒரு ஆண்டிற்கு 420 நாட்கள். அத்தபின்பு, பூமியின் சுழலக்கூடிய வேகம் குறைந்ததால் ஒரு ஆண்டு 365 நாட்களாக கணக்கிடப்படுகிறது.
ஆனால் நாட்களை மிகச்சரியாக கணக்கிட 4 வருடங்களுக்கு ஒரு தடவை பிப்ரவரி மாதத்தில் ஒரு நாளை சேர்த்து லீப் வருடமாக கணக்கிடுகிறோம். இந்நிலையில், ஆராய்ச்சியாளர்கள் 50 வருடங்களுக்கு முன் இருந்ததைவிட தற்போது பூமி வேகமாக சுழன்றுக் கொண்டிருக்கிறது என்று கூறியிருக்கிறார்கள்.
அதாவது, பூமி சுழலக்கூடிய வேகத்தில் ஒரு நொடி மாறுபாடு உள்ளது என்று கண்டறிந்துள்ளனர். சாதாரணமான கடிகாரங்களில் அல்லது டிஜிட்டல் கடிகாரங்களில் ஒரு நொடி மாறுபாட்டை கண்டுபிடிப்பது என்பது முடியாது. எனவே, ஆராய்ச்சியாளர்கள் அணுகடிகாரத்தை வைத்து இதனை கண்டறிந்துள்ளனர்.
அந்தக்கடிகாரத்தில் நேரத்தை துல்லியமாக கணக்கிட முடியும். எனவே, ஆராய்ச்சியாளர்கள் கடந்த 1972 ஆம் வருடத்திலிருந்து ஒவ்வொரு 18 மாதங்களுக்கும் ஒரு தடவை லீப் நொடியை சேர்த்து பூமியின் சுழற்சியில் இருக்கும் நொடிகளின் எண்ணிக்கையை பொறுத்து அணுகடிகாரத்தை வைத்திருக்கிறார்கள்.
பூமியின் சுழற்சி வேகம் அதிகமாக இருப்பதால் ஆராய்ச்சியாளர்கள் அணு கடிகாரத்தை ஒரு நொடி குறைத்திருக்கிறார்கள். இது தொடர்பில், இங்கிலாந்து நாட்டின் தேசிய இயற்பியல் ஆய்வகத்தின் விஞ்ஞானியான பீட்டர் வைபர்லி தெரிவித்துள்ளதாவது, பூமியின் சுழற்சி வேகம் மேலும் அதிகரிக்கும் பட்சத்தில், நாம் ஒரு நொடி குறைக்க வேண்டிய நிலை வரும் என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.
மேலும் இவ்வாறு பூமியின் சுழற்சி வேகம் அதிகரிக்க, பெருங்கடல்கள், வளி மண்டலத்தின் இயக்கம், பூமியின் மையப்பகுதி, சந்திரனின் ஈர்ப்புவிசை போன்ற பல காரணங்கள் உள்ளதாக கூறியிருக்கிறார்.