Categories
மாநில செய்திகள்

புதிய கட்டுப்பாடுகள்….. இன்று மாலை அறிவிப்பு வெளியாகிறதா….? அமைச்சர் தகவல்….!!!

தமிழகத்தில் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்துவதற்கான அடுத்தகட்ட அறிவிப்பு இன்று மாலை வெளியாகலாம் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளதாவது: “தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ள கூட்டத்தில் பல்வேறு மருத்துவ வல்லுநர்கள் விஞ்ஞானிகள் போன்ற பலரும் கலந்து கொள்கின்றனர் .

இந்த கூட்டத்தில் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பான முக்கிய ஆலோசனை நடத்தப்படுகின்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு முதல்வர் முக ஸ்டாலின் கூடுதல் கட்டுப்பாடுகள் அறிவிக்க வேண்டுமா? இல்லையா? என்பது தொடர்பாக தெரிவிப்பார். மேலும் தமிழகத்தில் தற்போது வரை ஒமைக்ரான் பேர் ஒமைக்ரான் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளதாக அவர் தெரிவித்தார்.

Categories

Tech |