Categories
மாநில செய்திகள்

இலவச மின் இணைப்பு…. வெளியான ஹேப்பி நியூஸ்….!!!!

தர்மபுரியில் விவசாய மின் இணைப்பு கேட்டு பதிவு செய்துள்ள விவசாயிகளுக்கு இயல்பு முறையில் மின் இணைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “தர்மபுரியில் 01.04.2003- 31.03.2013 வரை விவசாய மின் இணைப்பு கேட்டு பதிவு செய்துள்ள விவசாயிகளுக்கு இயல்பு முறையில் மின் இணைப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 01.04.2013 – 31.03.2014 வரை பதிவு செய்துள்ள விவசாயிகள் 10 ஆயிரமும், 01.04.2014 – 31.03.2018 வரை பதிவு செய்தவர்கள் சுயநிதி திட்டத்தின் கீழ் ரூபாய் 25 ஆயிரம் முதல் ரூபாய் 50 ஆயிரம் செலுத்த வேண்டும். பின்னர் மின் இணைப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |