Categories
தேசிய செய்திகள்

“முஸ்லீம்களை கொல்ல வேண்டும்”….. தேசத்தையே உலுக்கிய சர்ச்சை பேச்சு…. பெரும் பரபரப்பு….!!!!

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் டிசம்பர் 17ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை தரம் சன்சத் என்ற மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் ஏராளமான இந்து துறவிகள் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் பேசிய பேச்சாளர்கள் பலர் முஸ்லிம்களுக்கு எதிராக இன அழிப்பில் இந்துக்கள் ஈடுபட வேண்டும் என்று அழைப்பு விடுத்ததால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. இந்த மாநாட்டில் யதி நரசிங்கநாத் பேசியது, ஒவ்வொரு இந்துவும் பிரபாகரனாக பிந்தரன்வாலேவாக மாற வேண்டும். நமக்கு கத்தி போதாது அதை விட பெரிய நவீன ஆயுதங்கள் வேண்டும் என்று கூறினார். அதனைத் தொடர்ந்து இந்து ரஷா சேவா அமைப்பை சேர்ந்த பிரபோதானந்த் கிரி பேசியது, மியான்மரில் நடந்ததைப் போன்ற இன அழிப்பில் நாம் ஈடுபட வேண்டும். போலீஸ், அரசியல்வாதிகள், ராணுவம் மற்றும் இந்துக்கள் கையில் ஆயுதங்களை எடுத்துக்கொண்டு இன அழிப்பில் ஈடுபட வேண்டும். இதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை என்று அவர் கூறியது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இன்னொரு வீடியோவில் பூஜா ஷகுன் பாண்டே எனப்படும் சாத்வி அன்னபூர்ணா பேசியது, முஸ்லிம்களை ஒழிக்க வேண்டும் என்றால் அவர்களை கொல்ல வேண்டும். 100 வீரர்கள் கிடைத்தால் போதும் 20 லட்சம் பேரை கொன்று குவிக்கலாம் என்று அவர் ஆவேசமாகப் பேசி இருந்தார். இதுவும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து அவர் கூறியது, இந்திய அரசியலமைப்பு சட்டம் தவறாக இருக்கிறது. இந்தியர்கள் நாதுராம் கோட்சேவைத்தான் வணங்க வேண்டும். போலீஸ் நடவடிக்கை பற்றி எனக்கு கவலை இல்லை என்று அவர் கூறினார். இந்த வீடியோக்கள் அனைத்தும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இதற்கு பல தரப்பிலிருந்து கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து முன்னாள் டென்னிஸ் வீராங்கனை மார்ட்டினா நவரத்திலோவாவும் அதிர்ச்சியை வெளியிட்டுள்ளார். சர்வதேச அளவில் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த வீடியோ தற்போது உத்தரகாண்ட் போலீசார் இந்த விவகாரத்தில் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். இந்த மாநாடு முடிந்து 4 நாட்கள் ஆன நிலையில் தற்போது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒரே ஒருவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். அவரது பெயர் ஜிதேந்தர் நாராயண். இவர் உபி ஷியா வக்பு வாரிய தலைவராக இருந்தவர். சமீபத்தில்தான் இவர் இந்து மதத்திற்கு மாறினார். இதுகுறித்து ஹரித்வார் போலீஸ் எஸ்.பி. குமார் சிங் கூறியது, நிலைமை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

 

Categories

Tech |