ஷிவானி நாராயணன் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
இளம் நடிகை ஷிவானி நாராயணன் விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியல் மூலம் அறிமுகமானார். இதனையடுத்து, கடைக்குட்டி சிங்கம், இரட்டை ரோஜா போன்ற சீரியல்களிலும் நடித்து வந்தார். மேலும், விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபல நிகழ்ச்சியான ‘பிக்பாஸ்’ 4 வது சீசனில் போட்டியாளராக பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
தற்போது கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் ‘விக்ரம்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சமீபகாலமாக திரையுலக பிரபலங்களின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், இவரின் சொத்து மதிப்பு குறித்த தகவலும் வெளியாகியுள்ளது. அதன்படி, இவரின் முழு சொத்து மதிப்பு மட்டும் சுமார் 9 கோடி என கூறப்படுகிறது.