Categories
உலக செய்திகள்

செம வீடியோ: கிழவியையும் விட்டு வைக்கலயா…? ஹீரோ போல் வந்த இளைஞர்… என்ன நடந்தது தெரியுமா…? கௌரவித்த போலீஸ்…!!

அமெரிக்காவில் 87 வயதுடைய மூதாட்டியிடமிருந்து பர்சை பிடுங்கி சென்ற திருடனை இளைஞர் ஒருவர் துரத்திப் பிடித்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அமெரிக்காவில் ஓஹியோ என்னும் பகுதி உள்ளது. இந்தப் பகுதியிலுள்ள சாலையில் நடந்து சென்றுக்கொண்டிருந்த 87 வயதுடைய மூதாட்டியிடமிருந்து மர்ம நபர் ஒருவர் பர்சை பிடுங்கிக்கொண்டு ஓடியுள்ளார்.

இதனைக் கண்ட அப்பகுதியிலிருந்த இளைஞர் ஒருவர் 87 வயதுடைய மூதாட்டியிடமிருந்து பர்சை பிடுங்கிக் கொண்டு சென்ற திருடனை துரத்தி பிடித்துள்ளார். அதன்பின்பு அந்த இளைஞர் திருடனிடமிருந்து பர்சை பிடிங்கி மூதாட்டியிடமே திரும்ப ஒப்படைத்துள்ளார்.

இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானதையடுத்து அதனை அப்பகுதி காவல்துறை அதிகாரிகள் பார்த்துள்ளார்கள். அதன்பின்பு ஓஹியோ காவல்துறை அதிகாரிகள் மேற்குறிப்பிட்டுள்ள இளைஞனையும், மூதாட்டியையும் அழைத்து பாராட்டி சிட்டிசன் விருதையும் வழங்கியுள்ளார்கள்.

Categories

Tech |