Categories
உலக செய்திகள்

மக்களே பயப்படாதீங்க….! ஒமிக்ரான் வைரஸ் தொடர்பில்…. தென்ஆப்பிரிக்கா சொன்ன ஹேப்பி நியூஸ்….!!!!

அச்சுறுத்தி வரும் ஒமிக்ரான் வைரஸ் தொடர்பில் தென்ஆப்பிரிக்கா ஆறுதல் அளிக்கும் விதமாக மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.

சீனாவின் வூஹான் மாகாணத்தில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது வரை உலக நாடுகளை உலுக்கி வருகிறது. இந்த நிலையில் “ஒமிக்ரான்” என்ற உருமாறிய புதிய வகை வைரஸ் தென்ஆப்பிரிக்கா நாட்டில் முதன்முறையாக கண்டறியப்பட்டது. இதனால் உலக நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இந்நிலையில் மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் தென்ஆப்பிரிக்க நாட்டின் தொற்றுநோய்கள் ஆய்வு மையம் ஒமிக்ரான் வைரஸ் தொடர்பில் மகிழ்ச்சியான செய்தி ஒன்றை கூறியுள்ளது. அதாவது தென்ஆப்பிரிக்காவில் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்ட 80 சதவீதம் பேருக்கு மருத்துவ சிகிச்சை என்பது தேவைப்படவில்லை என்று அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதேசமயம் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் கட்டாயத்திற்கு தள்ளப்படும் நோயாளிகளுக்கு மற்ற வைரஸ்களால் ஏற்படும் ஆபத்தை போலவே அச்சுறுத்தல் இருக்கும் என்று கூறப்படுகிறது. அதோடு மட்டுமில்லாமல் ஒமிக்ரான் வைரஸ் கண்டறியப்பட்ட நாள் முதலே அதன் பரவல் தன்மை அதிகமாக இருந்து வருகிறது. இருப்பினும் டெல்டா வைரசை ஒப்பிட்டு பார்க்கும்போது ஒமிக்ரானால் ஏற்படும் பாதிப்பு என்பது குறைவாகவே இருக்கும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |