Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பணத்தை எடுக்க முடியாமல் அவதி…. சங்கத்தை திறக்க வேண்டும்…. பொதுமக்கள் போராட்டம்….!!

தொடக்க வேளாண்மை கடன் கூட்டுறவு சங்கத்தை திறக்க வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அடுத்துள்ள நயினார்கோவில் யூனியன் பி.கொடிகுளம் பகுதியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் இந்த கூட்டுறவு சங்கத்தில் கவரிங் நகைகளை வைத்து 1 கோடியே 40 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. இதனால் கடந்த 2 மாதங்களாக கூட்டுறவு வங்கி செயல்படாமல் மூடப்பட்டுள்ளது.

இந்நிலையில் கூட்டுறவு சங்கத்தில் கணக்கு வைத்திருக்கும் விவசாயில் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனையடுத்து சங்கத்தில் அடகு வைத்த நகைகளை மீட்க முடியாமலும், சேமித்த பணத்தை எடுக்க முடியாமலும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் நடப்பு ஆண்டிற்க்கான நகை கடன், விவசாய கடன், உரம் ஆகியவை வழங்கப்படவில்லை.

இதனை கண்டித்து பி.கொடிக்குளம், சிறுவயல், தனியாப்புளி, அ.பனையூர் கிளியூர், தியாகவன்சேரி ஆகிய பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து கூட்டுறவு சங்கத்தில் மோசடி செய்தவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும், சங்கத்தை மீண்டும் வழக்கத்திற்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |