Categories
பல்சுவை

டிசம்பர் 31ஆம் தேதிக்குள் இதையெல்லாம் செஞ்சுடுங்க…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

இந்த வருடம் முடிவதற்கு இன்னும் ஒரு சில நாட்கள் மட்டுமே உள்ளன. இருப்பினும் இந்த தேதிக்குள் முடிக்க வேண்டிய சில முக்கிய பணிகள் உள்ளது. இந்த வேலைகளை முடித்துக் கொள்வது மிகவும் நல்லது. அந்த வகையில்

PF கணக்கு:  பிஎஃப் கணக்கு வைத்திருப்போர் தங்களது அக்கவுண்டுக்கு நாமினியை நியமிக்கவேண்டும். அதற்கான கடைசி தேதி டிசம்பர் 31ஆம் தேதி ஆகும்.

வருமான வரி தாக்கல்: 2020-21 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்ய டிசம்பர் 31-ஆம் தேதி கடைசி தேதி ஆகும். இதற்கு முன்னதாக ஜூலை 31 மற்றும் செப்டம்பர் 30 என 2 முறை நீட்டிக்கப்பட்டது. தற்போது மூன்றாவது முறையாக டிசம்பர் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இனி மேலும் கடைசி தேதி நீட்டிக்கப்படும் வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகியுள்ளது.

வாழ்வு சான்றிதழ் தாக்கல்: பென்ஷன் வாங்கும் அனைவரும் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் இறுதிக்குள் தங்கள் வாழ்வு சான்றிதழை தாக்கல் செய்ய வேண்டும். ஆனால் இந்த ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதனால் டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் வாழ்வு சான்றிதழை பென்ஷன் தாரர்கள் சமர்ப்பிக்க வேண்டும்.

PF- ஆதார் இணைப்பு: PF கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கடைசி தேதி டிசம்பர் 31-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. எனவே UAN எண்ணை ஆதார் எண்ணுடன் இணைத்து விடவும். இல்லையென்றால் பிஎஃப் பணம் வருவதில் சிக்கல் ஏற்படும்.

Categories

Tech |