பெருவில் சிக்னலை கடக்க முயன்ற ட்ரக்கின் மீது சரக்கு ரயில் மோதிய விபத்து தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.
பெருவிலுள்ள சிக்னல் ஒன்றை டிரக் டிரைவர் கவனக்குறைவாக கடப்பதற்கு முயன்றுள்ளார். அப்போது சற்றும் எதிர்பாராதவிதமாக மெதுவாக வந்த சரக்கு ரயில் ட்ரக்கின் மீது மோதி சிறிது தூரம் அதனை இழுத்துச் சென்றுள்ளது.
இந்த விபத்தில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. இருப்பினும் போக்குவரத்து மிக கடுமையாக பாதிக்கப்பட்டதையடுத்து மீட்புப்படையினர்கள் அதனை சீர் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.