கேரளாவில் பரபரப்பான சாலையில் அமைந்துள்ள டீக்கடையில் குண்டுவெடிப்பு ஏற்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கேரள மாநிலம் பத்தனம் திட்டா அருகே பிடனுபிலவு அனிகாடு பகுதியில் பஷீர் என்பவருக்கு சொந்தமான கடையில் வழக்கம்போல் டீ கடையை திறந்து வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது கடையில் சில வாடிக்கையாளர்கள் வந்தனர்.
அவர்கள் கடையின் உள் பகுதியில் அமர்ந்து டீ குடித்தனர். அப்போது திடீரென கடையில் குண்டு வெடிக்கும் சத்தம் கேட்டது. இதில் கடைக்குள் இருந்த பொருட்கள் சிதறி விழுந்தன மேலும் கடைக்குள் இருந்து கரும்புகை கிளம்பியது. மேலும் கடையும் தீப்பற்றி எரிந்தது. இதில் உரிமையாளர் பஷீர் மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர். அதன்பின்னர், கடையிலிருந்து அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து காவல்துறையினரிடம் புகார் அளித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், அவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். டீக்கடையில் குண்டுவெடித்தது எப்படி? நாசவேலை காரணமா? இதில் தொடர்புடையவர்கள் யார் என்பது பற்றி விசாரணை நடந்து வருகிறது. மேலும் இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.