Categories
தேசிய செய்திகள்

போஸ்ட் ஆபிஸ்ல சூப்பர் திட்டம்…. 40 லட்சம் வரை ரிட்டன்ஸ்…. இதோ முழு விபரம்….!!!!

மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் அஞ்சல் துறை மக்களுக்கு பயன்தரும் வகையில் பல்வேறு சிறந்த திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மக்களும் தங்களது முதலீட்டு தொகையின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் அடிப்படையில் அஞ்சல் துறையில் தங்களுடைய சேமிப்பை தொடங்கி வருகின்றனர். ஏனென்றால் அஞ்சல் துறை முதலீடு என்பது சிரமம் இல்லாத ஒரு முதலீடு ஆகும். ரிஸ்க் எடுக்க விரும்புபவர்கள் பங்கு சந்தை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளில் தங்களது முதலீட்டை தொடங்கி வருகின்றனர்.

தங்களின் முதலீட்டை பாதுகாப்பு மற்றும் நல்ல ரிட்டன்ஸ் கிடைக்கும் வகையில் தொடங்க விரும்புபவர்களுக்காகவே அஞ்சல் துறையில் செயல்படுத்தப்பட்ட சிறந்த சேமிப்பு திட்டம்தான் PPF திட்டம் ஆகும். இந்த திட்டத்தில் தினமும் ரூ.417 முதலீடு செய்வதன் மூலமாக ரூ.40 லட்சத்திற்கு மேல் ரிட்டன்ஸ் பெற முடியும். அதாவது தினமும் ரூ.417, மாதத்திற்கு ரூ.12,500, வருடத்திற்கு ரூ.1.5 லட்சம் ஆகும். இந்த திட்டத்தின் மெச்சூரிட்டி காலம் 15 வருடங்கள் ஆகும்.

அதன்படி ஒரு வருடத்துக்கு ரூ.1.5 லட்சம் என்றால் 15 ஆண்டுகளுக்கு ரூ.22.50 லட்சம் முதலீடு செய்கிறோம். தற்போது PPF திட்டத்துக்கு 7.1% வட்டி வழங்கப்பட்டு வருகிறது. அவ்வாறு வழங்கப்படும் வட்டியின் மூலமாக ரூ.18.18 லட்சம் கிடைக்கிறது. இவ்வாறு நாம் முதலீடு செய்த தொகை ரூ.22.50 லட்சம் மற்றும் வட்டி ரூ.18.18 லட்சம் இரண்டும் சேர்த்து இந்த திட்டத்தின் மெச்சூரிட்டி காலம் முடிவடையும் போது ரூ.40.68 லட்சம் ரிட்டன்ஸ் கிடைக்கும். உங்கள் வசதிக்கு ஏற்றவாறு முதலீட்டை செலுத்தலாம்.

Categories

Tech |