Categories
மாநில செய்திகள்

இளைஞர்களே…. தமிழகத்தில் நாளை மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்…. மிஸ் பண்ணிடாதீங்க…!!!!

தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வந்ததை அடுத்து அரசு ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது. இந்நிலையில் ஊரடங்கு காலத்தில் வேலையின்றி தவித்தவர்கள் மீண்டும் வேலை வாய்ப்புகளை தேடி வருகின்றனர். கொரோனா பரவலுக்கு முன் அனைத்து மாவட்டங்களிலும் தனியார் துறை வேலைவாய்ப்புகள் நடைபெறும். இதனிடையில் கொரோனா தாக்கத்தால் முகாம்கள் ரத்து செய்யப்பட்டது. தற்போது அரசு அனுமதி அளித்துள்ள நிலையில் மாவட்டம்தோறும் வேலைவாய்ப்பு இன்றி தவிப்பவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் தனியார் துறைகள் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி நேர்காணல் மூலமாக ஆட்களை தேர்வு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் மற்ற மாவட்டங்களை தொடர்ந்து நாளை (24.12.2021) விழுப்புரத்தில் அரசு வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தொழில் வழிகாட்டுதல் மையம் சார்பாக தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் 8-ம் வகுப்பு கல்வித்தகுதி பெற்றவர்கள் முதல் டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு முடித்தவர்கள் வரை கலந்துகொள்ளலாம். விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 18 முதல் 30 வயது உள்ளவர்கள் இந்த முகாமில் கலந்துகொண்டு வேலை வாய்ப்பை பெறலாம் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இந்த முகாமில் 20-க்கும் மேற்பட்ட தனியார் துறைகள் பங்கேற்க இருக்கின்றனர். இதில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் “www.tnprivatejobs.tn.gov.in” என்ற இணையதளத்தில் தங்களது கல்வித்தகுதி விவரங்களை பதிவு செய்ய வேண்டும். மேலும் விவரக்குறிப்பு மற்றும் கல்வி சான்றிதழ் நகல்களுடன் முகாமில் கலந்துகொண்டு நாளை நடைபெறும் முகாம் மூலமாக வேலைவாய்ப்பு பெற்று பயன்பெறலாம் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |