Categories
உலக செய்திகள்

“உங்களுக்காக நாங்க இருக்கோம்”…. ஆப்கான் மக்களுக்கு உறுதியளித்த இந்தியா….!!!!!

ஆப்கானிஸ்தானுக்கு மனிதாபிமான அடிப்படையிலான உதவிகள் தொடரும் என ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியா தெரிவித்துள்ளது.

ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் உரையாற்றிய இந்தியாவின் ஐநா பிரதிநிதியான திருமூர்த்தி ஆப்கானிஸ்தானில் மனிதாபிமான நிலைமை மிகவும் கவலைக்குரியதாக இருப்பதாக கூறினார். எனவே ஆப்கானிஸ்தான் மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை அளிக்க இந்தியா எப்போதும் தயாராக உள்ளதாக அவர் கூறினார். இந்தியா சார்பில் இதுவரை 5 லட்சம் டோஸ் தடுப்பூசிகளையும் 1.6 மெட்ரிக் டன் உயிர் காக்கும் மருந்து களையும் அனுப்பி உள்ளதாக அவர் கூறினார். மேலும் தேவையான அளவு மருத்துவ உதவிகளையும் பொருட்களையும் வழங்க இந்திய அரசு தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.

Categories

Tech |