துருக்கியில் உள்நாட்டில் தயாரிக்கப்பட் துருகோவேக் எனப்படும் கொரோனா தடுப்பூசியை பயன்படுத்திக் கொள்ள அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.
துருக்கியில் முற்றிலும் உள்நாட்டிலேயே தயார் செய்யப்பட்ட துருகோவேக் எனப்படும் தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்காக பயன்படுத்திக் கொள்ளலாம் என அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. அடுத்த வாரம் முதல் பொதுமக்கள் இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளலாம் என அந்நாட்டு அதிபர் தாயீப் எர்டோகன் கூறியுள்ளார் இதற்கு முன்னர் துருக்கியில் சீன தயாரிப்பான சினோவேக் மற்றும் சைபர் தடுப்பூசிகளை துருக்கி மக்கள் பயன்படுத்தி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் உலக சந்தைகளிலும் துருகோவேக் தடுப்பூசிகளை பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு அதிபர் தாயீப் எர்டோகன் கூறியுள்ளார்.