உத்தரபிரதேச மாநில அரசு நவம்பர் மாதம் அரசு ஊழியர்களுக்கு 20 % அகவிலைப்படியை உயர்த்தி வழங்க அரசாணையை வெளியிட்டது. இந்த உத்தரவில் ஜனவரி 1, 2016 முதல் திருத்தி அமைக்கப்பட்ட ஊதியம் பெற்ற அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஜூலை 1, 2021 முதல் அடிப்படை ஊதியத்தை 28 % அகவிலைப்படி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 30, 2021 வரை அகவிலைப்படி விகிதம் அடிப்படை ஊதியத்தில் 17 சதவீதமாக இருக்கும். ஜனவரி 1, 2006 திருத்தப்பட்ட ஊதிய விகிதத்தை பெறும் ஊழியர்கள் ஜூலை 1, 2021 முதல் அடிப்படை ஊதியத்தில் 189 சதவீத டிஏவை பெறுவார்கள்.
இந்த ஊழியர்கள் ஜனவரி 1, 2016 ஆம் ஆண்டு முதல் திருத்தப்பட்ட ஊதியக் குழுவைத் தேர்ந்தெடுக்காதவர்கள் அல்லது ஊதிய விகிதம் திருத்தப்படாதவர்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும். ஊதிய குழுவின் முதல் அறிக்கையின் பரிந்துரைகளின் மீது எடுக்கப்பட்ட முடிவின்படி 1, 2020 முதல் ஜூன் 30, 2011 வரையிலான காலகட்டத்தில் அடிப்படை ஊதியத்தில் 164 சதவீத டிஏ விகிதம் இருக்கும். கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ் ராதா சவுகான் உத்தரவின்படி, 5 மாத நிலுவைத் தொகை டிஏ, பிஎஃ ப் கணக்கில் டெபாசிட் செய்யப்படும். அதாவது ஜூலை 1 முதல் டிசம்பர் 1 வரையிலான நிலுவைத் தொகை பிஎஃ ப் கணக்குக்கு செல்லும்.
அதுமட்டுமின்றி நிலுவைத் தொகை டிசம்பர் 31, 2022 வரை பிஎஃ ப் கணக்கில் டெபாசிட் செய்யப்படும். அரசாணை வெளியாவதற்கு முன்பு ஓய்வு பெற்றவர்கள் அல்லது 6 மாதங்களில் நிலையில் இருப்பவர்களுக்கு தொகை ரொக்கமாக வழங்கப்படும். கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.ராதா சவுகானின் உத்தரவின்படி ஜூலை 1, 2021 முதல் 5 வது ஊதியக்குழு ஊழியரின் டிஏ 356 சதவீதத்திலிருந்து 368 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் 6-வது ஊதியக் குழுவின் ஊழியர்களின் டிஏ 189 சதவீதத்திலிருந்து 196 சதவீதமாக உயர்த்தப்படுகிறது.
இதைத்தவிர ஜூலை 1, 2021 முதல் மாநிலத்தில் பணியமர்த்தப்பட்ட அகில இந்தியப் பணி அதிகாரிகளுக்கு 28-க்கு பதிலாக 31 % என்ற அடிப்படையில் டிஏ தற்போது வழங்கப்படும். இந்நிலையில் உத்தரப்பிரதேசத்தில் அடுத்த வருட தொடக்கத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் மாநில அரசு தனது ஊழியர்களுக்கு புத்தாண்டு பரிசாக ஊழியர்களின் அகவிலைப்படியை 3 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயர்த்தியுள்ளது. இதன் காரணமாக ஊழியர்களின் அடிப்படை சம்பளமானது உயர்த்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.