பிரான்சில் ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தின்படி குறித்த காலத்தில் ஏவுகணைகள் உள்ளிட்ட ஆயுதங்களை வழங்க தாமதம் செய்ததால் இந்தியா 8.50 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது. பிரான்ஸ் நாட்டின் டசால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடமிருந்து 59,000 கோடியில் 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு இந்தியா ஒப்பந்தம் போட்டிருந்தது. அந்த ஒப்பந்தத்தின்படி, ரஃபேல் போர் விமானங்கள் இந்தியா வர தொடங்கிவிட்டது.
இந்தப் போர் விமானங்களுக்கு தேவையான ஏவுகணைகளை பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த எம்.பி.டி.ஏ நிறுவனம் வழங்க வகை செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த ஏவுகணைகளை வழங்குவதற்கு அந்த நிறுவனம் காலதாமதம் செய்துள்ளது. இதற்காக அந்த நிறுவனத்துக்கு மத்திய ராணுவ அமைச்சகம் 8.50 கோடி ரூபாய் அபராதம் விதித்தது. இந்த அபதாரத்தை அந்த நிறுவனம் செலுத்தி விட்டது. இருந்தாலும் அபதாரம் விதித்தற்கு தனது எதிர்ப்பை மத்திய ராணுவ அமைச்சகத்திடம் பதிவு செய்திருக்கிறது. என தகவல்கள் வெளியாகியுள்ளது.