Categories
உலக செய்திகள்

“ஓமிக்ரானின் வேகம்” வரலாற்றிலேயே இல்ல…. பில்கேட்ஸின் ட்விட்டர் பதிவு… இதோ… என்னன்னு பாருங்க….!!

தென்னாப்பிரிக்காவில் முதன்முதலாக உருமாற்றமடைந்த ஓமிக்ரான் வைரஸ் பரவலின் வேகம் வரலாறு காணாத அளவிற்குவுள்ளதாக மைக்ரோசாஃப்டின் நிறுவனரான பில்கேட்ஸ் டுவிட்டரில் எச்சரித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்காவில் முதன்முதலாக உருமாற்றமடைந்த கொரோனாவிற்கு ஓமிக்ரான் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த ஓமிக்ரான் வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவ தொடங்கியுள்ளது. இந்நிலையில் இந்த ஓமிக்ரான் வைரஸ் பரவலின் வேகம் வரலாறு காணாத அளவிற்கு உள்ளதாக மைக்ரோசாஃப்டின் நிறுவனரான பில்கேட்ஸ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

மேலும் இந்த ஓமிக்ரான் தொற்று அமெரிக்காவில் ஒரே வாரத்தில் 3 சதவீதமாக இருந்த பாதிப்பு 73% ஆக அதிகரித்துள்ளது என்றும் பதிவிட்டுள்ளார். அதோடு மட்டுமின்றி சீனாவிலிருந்து தோன்றிய இந்த மாபெரும் தொற்றல் நாம் அனைவரும் மிகவும் மோசமான கட்டத்திற்குள் பயணிக்க இருக்கிறோம் என்றும் பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார்.

இந்த பெரும் தொற்றிலிருந்து தங்களை காத்துக் கொள்ள அனைவரும் கட்டாயமாக பூஸ்டர் டோஸ்ஸையும், முக கவசத்தையும் கட்டாயமாக போடுமாறு பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |