Categories
மாநில செய்திகள்

BREAKING : தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு…..? திடீர் ஆலோசனை….!!!!

ஒமைக்ரான் பரவலை தடுப்பது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் வெ இறையன்பு ஆலோசனை நடத்துகிறார்.

தென் ஆப்பிரிக்காவில் கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து ஒமைக்ரான் என்ற பெயருடன் பரவி வருகின்றது. இந்த தொற்று உலகம் முழுவதும் 80 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியது. உயிரிழப்புகள் பெரிதாக ஏற்படவில்லை என்றாலும் கூட இந்தத் தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இதுவரை இந்தியாவில் 230 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. முன்னதாக மத்திய சுகாதாரத்துறை செயலர் ஒமைக்ரான் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்களுக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இந்நிலையில் இன்று ஒமைக்ரான் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி காட்சி வாயிலாக தலைமை செயலாளர் வெ இறையன்பு பகல் 12 மணியளவில் ஆலோசனை மேற்கொள்கிறார். கிறிஸ்துமஸ், புத்தாண்டு வருவதால் நடவடிக்கைகள் பற்றி ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் புத்தாண்டுக்கு பிறகு தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்த ஆலோசனை செய்யப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |