நைஜீரியாவில் சக ஊழியரின் காதலை ஏற்ற பெண்ணை உயர் அதிகாரிகள் ராணுவ நடத்தை விதிகளை மீறிய குற்றத்திற்காக கைது செய்துள்ளார்கள்.
நைஜீரியாவில் இக்படா என்னும் நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் அமைந்துள்ள ராணுவ பயிற்சி மையத்தில் ஷகினா என்ற பெண்மணி உயரதிகாரி பொறுப்பில் இருந்துள்ளார். இவரும் அதே பயிற்சி மையத்தில் பணிபுரிந்த ஜோன்சன் என்பவரும் காதலித்துள்ளார்கள்.
இந்நிலையில் இருவரும் பயிற்சி மைதானத்தில் வைத்து ராணுவ உடையில் மோதிரம் மாற்றிக் கொண்டு தன்னுடைய லவ் ப்ரொபோஸலை ஒருவருக்கொருவர் வெளிப்படுத்தியுள்ளார்கள். இதனை சக வீரர்கள் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்டதை ராணுவ உயர் அதிகாரிகள் பார்த்துள்ளார்கள்.
இதனையடுத்து ராணுவ உயர் அதிகாரிகள் ஷகீனாவை கைது செய்து உத்தரவிட்டுள்ளார்கள். ஏனெனில் ஷகினா ராணுவ உடையில் அதன் நடத்தை விதிகளை மீறியதாக கூறி அவரை கைது செய்துள்ளார்கள்.