Categories
கிரிக்கெட் விளையாட்டு

நியூசிலாந்து VS வங்காளதேசம் டெஸ்ட் தொடர் ….! கேன் வில்லியம்சன் விலகல் …!!!

வங்காளதேசம் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் இருந்து  நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் விலகியுள்ளார்.

நியூசிலாந்தில்  சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள வங்காளதேச அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது .இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வருகின்ற ஜனவரி 1-ஆம் தேதி நடைபெறுகிறது .இத்தொடருக்கான 13 பேர் கொண்ட நியூஸிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தொடரிலிருந்து நியூசிலாந்து  அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் விலகியுள்ளார் .இதனால் அவருக்கு பதிலாக நியூசிலாந்து அணியின் கேப்டனாக டாம் லேதம் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில்  டி20 உலக கோப்பை போட்டியின்போது காயமடைந்த டேவன் கான்வே மீண்டும் அணியில் இடம்பிடித்துள்ளார்.

நியூசிலாந்து அணி: டாம் லாதம் (கேப்டன்), டாம் ப்ளெண்டல், டிரென்ட் போல்ட், டேவன் கான்வே, மேட் ஹென்றி, கைல் ஜேமிசன், டேரில் மிட்செல், ஹென்றி நிக்கோலஸ், ரச்சின் ரவீந்திரா, டிம் சவுத்தி, ராஸ் டெய்லர், நீல் வாக்னர், வில் யங்.

Categories

Tech |