Categories
பல்சுவை

ஏர்டெல் வாடிக்கையாளர்களே…. சேவைகளை தெரிந்துகொள்வது எப்படி…. முழு விபரம் இதோ….!!!!

ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சிறந்த சேவைகளை தொடர்ந்து வழங்கி வருகிறது. அந்த வகையில் போஸ்ட்பெய்டு, பிரீபெய்டு திட்டங்கள் குறித்து அறிவதற்கு பல்வேறு வழிமுறைகளையும் வழங்கியுள்ளது. ஏனென்றால், சிலர் ப்ரீபெய்டு, போஸ்ட்பெய்டு இன்டர்நெட் பிளான் உள்ளிட்டவைகளை அறிந்து கொள்வதில் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். அதனால் ஏர்டெல் பயனர்களுக்கு உதவும் வகையில் ஏர்டெல் நிறுவனம் பல்வேறு சேவைகளை தொடர்ந்து வழங்கி வருகிறது. இந்த சேவைகளை நாம் USSD, Airtel app, Airtel Website மற்றும் கஸ்டமர் கேர் கால் ஆகியவற்றின் மூலம் எளிதில் தெரிந்துகொள்ள முடியும். இத்தகைய சேவைகளை எப்படி பெறுவது என்பது குறித்து முழு விவரம் கீழே காணலாம்.

USSD மூலம் Airtel சேவைகளை பெறுவதற்கான வழிமுறைகள்:

Data Balance – *123*10#
SMS Balance – *121*7#
Plan Valitity – *121*2#
Talktime – *123#
Postpaid – *121#

Airtel app மூலம் Airtel சேவைகளை பெறுவதற்கான வழிமுறைகள்:

முதலில் உங்களது மொபைலில் Airtel Thanks App பதிவிறக்கம் செய்து உங்களது ஏர்டெல் நம்பரை பதிவு செய்துகொள்ள வேண்டும்.

பின்னர் அதில் Services என்ற தேர்வை க்ளிக் செய்து Data Balance, SMS Balance, Plan Validity, Talk time, Postpaid உள்ளிட்ட விபரங்களை தெரிந்துகொள்ளலாம். முதலில் கூகுளில் Airtel Selfcare என்று டைப் செய்து அதில் முதலில் தோன்றும் Website க்ளிக் செய்து உங்களது Airtel நம்பரை பதிவு செய்தவுடன் வரும் OTP யை கொடுத்தவுடன் தோன்றும் பக்கத்தில் மேற்கண்ட அனைத்து விபரங்களையும் பெற முடியும்.

Customer Care – 121
Airtel Problems – 198
DND Active – 1909
Airtel Recharge – 123.

Categories

Tech |