‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் கலக்கலான ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் விக்னேஷ் சிவன். இவர் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் ”காத்துவாக்குல ரெண்டு காதல்”. இந்த படத்தில் விஜய் சேதுபதி, சமந்தா மற்றும் நயன்தாரா ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்த படத்தில் நடிகர் ரெடின் கிங்ஸ்லி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவரின் பிறந்தநாளை முன்னிட்டு இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில், இவர் இருக்கும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் ஒன்றை வெளிட்டு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.
Happy birthday @RedinKingsley 🥳
Plays the character of #Arnold in our film #KaathuVaakulaRenduKaadhal 😇
It always feels nice & happy to work with this little old man 🥳🥳🥳 ! @Rowdy_Pictures @7screenstudio @DoneChannel1 pic.twitter.com/ZzfDi53LUW
— VigneshShivan (@VigneshShivN) December 22, 2021