Categories
மாநில செய்திகள்

ஜல்லிக்கட்டு வழக்கு….. முடித்து வைத்த ஐகோர்ட் கிளை…..!!!

ஜல்லிக்கட்டு போட்டிகளில் காளைகளுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்படாத வண்ணம் முறைப்படுத்த கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை முடித்து வைத்து உத்தரவு பிறப்பித்துள்ளது. மதுரை திருமங்கலத்தை சேர்ந்த மகேந்திரன் என்பவர் தாக்கல் செய்திருந்த பொதுநல வழக்கில் ஜல்லிக்கட்டு போட்டிகளில் அதிகபட்சமாக 750 காளைகள் மட்டுமே பங்கேற்க முடியும் என்றும், ஆனால் தற்போது ஆயிரத்திற்கும் மேற்பட்ட காளைகள் ஜல்லிக்கட்டில் பங்கேற்க குற்றம்சாட்டினார்.

இதனால் ஒப்புகைச்சீட்டு பெற்ற காளைகள் போட்டிகளில் பங்கேற்க முடியாத நிலை ஏற்படுவதாகவும் அதிக காளைகள் போட்டிகளில் பங்கேற்பதால் தள்ளுமுள்ளு ஏற்படுவதாகவும் கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள் இதுதொடர்பான வழக்குகளில் உச்ச நீதிமன்றம் நெறிமுறைகளை வெளியிட்டுள்ளதாகவும் அதனை முறையாக பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவித்தார். இதற்காக புதிய உத்தரவை பிறப்பிக்க வேண்டிய அவசியமில்லை என்று கூறி இந்த வழக்கை முடித்து வைத்தார்.

Categories

Tech |