சமாஜ்வாதி கட்சி தலைவரும், உத்தரபிரதேச முன்னாள் முதல் மந்திரியுமான அகிலேஷ் யாதவ் மனைவி டிம்பிள் யாதவ் கொரோனா தடுப்பூசி இரண்டு தவணை செலுத்திக் கொண்டுள்ளார். இருப்பினும் அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், நான் இரண்டு தவணை தடுப்பூசி போட்டு உள்ளேன். எனக்கு அறிகுறி அற்ற கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நான் என்னை தனிமைப்ப்படுத்திக்கொண்டு உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.