15-வது சீசன் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது .
15-வது ஐபிஎல் சீசனுக்கான மெகா ஏலம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற இருப்பதாக என்ற தகவல் வெளியாகியுள்ளது.அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 7 , 8 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் ஐபிஎல் ஏலம் நடைபெற இருப்பதாக பிசிசிஐ மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார் .மேலும் இந்த மெகா ஏலம் 2 நாட்கள் நடைபெறுகிறது .
இதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருவதாகவும், கொ ரோனா தொற்று பரவல் அதிகரிக்காமல் இதே நிலை தொடர்ந்தால் இந்தியாவில் ஐபிஎல் ஏலம் நடைபெறும் என்றும் , இல்லையெனில் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் ஏலம் நடைபெற வாய்ப்பு உள்ளது ‘என்று அவர் தெரிவித்துள்ளார்.
இம்முறை ஐபிஎல் ஏலத்தில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்க உள்ளன. இதில் நடப்பு சாம்பியனான சிஎஸ்கே உட்பட புதிய அணிகளான லக்னோ ,அகமதாபாத் ஆகிய 2 அணிகளும் இந்த ஏலத்தில் பங்கேற்று தங்கள் அணிகளுக்கான வீரர்களை தேர்வு செய்ய உள்ளது.