Categories
தேனி மாவட்ட செய்திகள்

இனிமேல் முகக்கவசம் கட்டாயம்…. அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு…. ஆட்சியர் விடுத்த எச்சரிக்கை….!!

முககவசம் அணியாமல் வெளியே வருபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகம் முழுவதிலும் பரவலை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் தற்போது ஒமைக்ரான் வைரசும் பரவி வருகிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தி வருகின்றனர். அதன் அடிப்படையில் தேனி மாவட்டத்தில் ஆட்சியர் முரளிதரன் மாவட்டம் முழுவதிலும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என்றும் கட்டாயமாக முக கவசம் அணிய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

எனவே ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது போடி பேருந்து நிலையம் மற்றும் கடைவீதிகளில் பொதுமக்கள் எவ்வித அச்சமின்றி முகக்கவசம் அணியாமல் சுற்றி திரிகின்றனர். இதனையடுத்து அவர்களிடம் கட்டாயம் முககவசம் அணியவேண்டும் அரசின் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என கூறியுள்ளார். இதனை கடைபிடிக்காத நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Categories

Tech |