Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

சாலையில் தோண்டிய பள்ளம்….. வனத்துறையினரிடம் வாக்குவாதம்…. போராட்டத்தால் பரபரப்பு….!!

வனப்பகுதிக்குள் செல்ல முடியாமல் சாலையில் பள்ளம் தோண்டியதால் பொதுமக்கள் தடுத்தி நிறுத்தி போராட்டம் நடத்தியுள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அடிவாரத்தில் குட்டுக்காடு கிராமம் உள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் உள்ள விவசாயிகள் விவசாய நிலங்களுக்கு செல்வதற்கு வனப்பகுதியின் வழியாக தான் செல்லவேண்டும். இந்நிலையிலும் வனப்பகுதியில் சிலர் ஆக்கிரமிப்பு செய்ததாக வனத்துறையினருக்கு புகார் எழுந்து உள்ளது. எனவே வனத்துறையின் துறையினர் அப்பகுதியில் பெரிய பள்ளம் ஒன்று தோண்டி வனப்பகுதிக்குள் நுழையாத வகையில் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதனை அறிந்த குட்டுக்காடு கிராம மக்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு திரண்டு சென்று பள்ளம் தோண்டுவதை தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனால் பொதுமக்களுக்கும், வனத் துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவலறிந்த வனச்சரகர் பெருமாள் மற்றும் அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அதன்பிறகு வனப்பகுதியில் ஆக்கிரமிப்பு செய்ய மாட்டோம் என கிராம மக்கள் அனைவரிடமும் வன அலுவலர் எழுதி வாங்கியுள்ளார். இதற்குபின்னரே பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Categories

Tech |