தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது.
இந்திய அணியின் தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது .இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வருகின்ற 26-ம் தேதி தொடங்குகிறது .இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் .இதுவரை தென்னாப்பிரிக்காவில் இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்றது இல்லை என்பதால் இத்தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அதே சமயம் தற்போது தென்னாப்பிரிக்காவில் ‘ஓமைக்கரான்’ கொரோனா வைரஸ் தொற்று பரவலால் இத்தொடருக்கான பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதேசமயம் முதல் டெஸ்ட் போட்டியை நேரில் காண ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதோடு வீரர்களுக்கு பயோ பபுள் விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியத்துக்கு பிசிசிஐ தகவல் ஒன்றை அனுப்பியுள்ளது .அதில் கொரோனா வைரஸ் தாக்கம் மிகவும் அதிகமாக காணப்பட்டாலோ அல்லது வீரர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டாலோ உடனடியாக தொடரை நிறுத்திவிட்டு இந்திய அணி நாடு திரும்பிவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .பிசிசிஐ-யின் இந்த முடிவுக்கு தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் போர்டு ஒப்புக்கொண்டுள்ளது. இதனால் போட்டி நடைபெறும் போது கொரோனா வைரஸ் பரவல் கையை மீறவே வாய்ப்பிருப்பதால் போட்டியில் நிறுத்தப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. ஒருவேளை தொடரை நிறுத்தும் பட்சத்தில் இந்திய போட்டிகள் இங்கிலாந்து தொடரை போல் அடுத்த ஆண்டு நடத்தப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.