Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கணவருடன் அனுப்பி வைத்த பெற்றோர்…. இளம்பெண்ணுக்கு நடந்த விபரீதம்…. உறவினர்களின் போராட்டத்தால் பரபரப்பு…!!

இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ரெண்டலப்பாறை பகுதியில் பன்னீர்செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஐசக் நியூட்டன் என்ற மகன் உள்ளார். இவர் சிங்கப்பூரில் கிரேன் ஆபரேட்டராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஐசக் நியூட்டனுக்கு மெசியா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணமான 10 நாட்களிலேயே ஐசக் நியூட்டன் சிங்கப்பூருக்கு சென்று விட்டார். இதனையடுத்து ஐசக் நியூட்டனின் குடும்பத்தினர் அடிக்கடி தகராறு செய்ததால் கோபமடைந்த மெசியா தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

கடந்த 19-ஆம் தேதி சிங்கப்பூரில் இருந்து சொந்த ஊருக்கு வந்த ஐசக் நியூட்டன் வீட்டிற்கு வருமாறு தனது மனைவியை அழைத்துள்ளார். அப்போது பெற்றோர் பேச்சுவார்த்தை நடத்தி ஐசக் நியூட்டனுடன் மெசியாவை அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து மெசியாவை அவரது பெற்றோர் செல்போன் மூலம் பலமுறை தொடர்பு கொண்டும் அழைப்பை ஏற்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த பெற்றோர் ஐசக் நியூட்டனின் வீட்டிற்கு சென்று பார்த்த போது மெசியா மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார்.

இந்நிலையில் மெசியாவின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி அவரது உறவினர்கள் திண்டுக்கல் அரசு மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஐசக் நியூட்டன், அவரது தாய் ராஜகுமாரி, சகோதரன் ராஜா ஆகிய 3 பேரையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |