Categories
அரசியல்

யாரும் வம்பு வச்சுக்காதீங்க…. அப்புறம் அவ்ளோதான்…. முதல்வர் ஸ்டாலின் போட்ட கண்டிஷன்….!!!!

தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்டுள்ள 11 மருத்துவ கல்லூரிகளை திறந்து வைப்பதற்காக பிரதமர் மோடி ஜனவரி மாதம் 12-ஆம் தேதி தமிழகத்திற்கு வர உள்ளார். மோடியின் இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்தது. மேலும் ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததும் மத்திய அரசு முழக்கத்தை முன்வைத்து மாநில உரிமைகளை அதிகம் பேசியது. இந்த நிலையில் தமிழகத்திற்கு பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடியும், ஸ்டாலினும் ஒரே மேடையில் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும் ஸ்டாலின் மோடி கலந்துகொள்ளும் நிகழ்வில் நீட் தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாக வாய்ப்புள்ளதாக டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றது. அதன் பின்னர் மேடையில் வைத்து சில விஷயங்களை பிரதமர் மோடியிடம் ஸ்டாலின் வலியுறுத்த வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. பொதுவாக மோடி தமிழகத்திற்கு வரும் போதெல்லாம் #gobackmodi என்ற ஹேஸ்டேக் வைரலாகி வருகிறது. அதேநேரத்தில் பாஜகவினர் #TNWelcomesPMModi என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட்டாக்குவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

ஆனால் திமுக ஆட்சி அமைந்ததும் என்னதான் மத்திய அரசை சீண்டிக் கொண்டே இருந்தாலும் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுடன் நட்பாக இருக்கவே விரும்புகிறார். மேலும் திமுக எம்பிக்களும் டெல்லியில் சுமூகமான போக்கையே கடைபிடித்து வருகின்றனர். அதேபோன்று மோடியும் திமுக அரசுடன் இணக்கமான போக்கையே விரும்புவதாக டெல்லி பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து தமிழகம் ஏற்கனவே நிதி நெருக்கடியில் இருப்பதாகவும், மத்திய அரசிடம் இருந்து வரவேண்டிய நிதியும் சரியாக வரவில்லை என்றும் தொடர்ந்து ஸ்டாலின் குற்றம் சாட்டி வருகிறார்.

மேலும் தமிழகத்தில் செயல்படுத்தப்பட வேண்டிய திட்டங்கள் பெரும்பாலும் மத்திய அரசு நிதி பங்களிப்புடன் செயல்படுத்த வேண்டியுள்ளது. அதனால் மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைபிடித்தால் சிக்கலாகி விடும் என்பது ஸ்டாலின் கணக்காக வைத்துள்ளார் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். இந்த நிலையில் பிரதமர் மோடி தமிழகம் வருவதையொட்டி முதல்வர் ஸ்டாலின் தனது கட்சிக்காரர்களுக்கும், கூட்டணி கட்சியினருக்கும், சில கண்டிஷன் போட்டுள்ளார். அது என்னவென்றால் #gobackmodi- என்ற ஹேஷ்டேக்கை ட்ரண்ட் செய்யக்கூடாது என்று ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாராம்.

Categories

Tech |