தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு காலை மற்றும் மாலை நேரங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் அரசு பேருந்துகளில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் இலவசமாக பயணம் மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக தமிழக போக்குவரத்துத் துறை சார்பாக இலவச பயண அட்டை வழங்கப்படுகிறது. இதனை பயன்படுத்தி மாணவர்கள் பேருந்தில் கட்டணம் இல்லாமல் இலவசமாக சென்று வருகின்றன. 2020 முதல் தொற்று காரணமாக பள்ளிகள் திறக்காமல் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. தற்போது தொற்று குறைந்ததால் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் நேரடி வகுப்புகளுக்கு வந்து செல்கின்றனர்.
இருப்பினும் பள்ளி மாணவர்களுக்கு போதிய அளவு பேருந்துகள் இல்லாத காரணத்தினால் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர் . அதனால் காலை மற்றும் மாலை வேளைகளில் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் அரசு கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் அதிகமாக இருப்பதால் கல்லூரி நேரங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் 9:00 மணி முதல் 9.45 மணிக்கு செல்லும் அரசு பேருந்தில் கல்லூரி மாணவர்களின் கூட்டம் அலை மோதுவதால், மாணவர்கள் படிக்கட்டில் நின்றபடி ஆபத்தான முறையில் பயணம் மேற்கொள்கின்றனர். இதனால் தமிழக அரசு கூடுதல் பேருந்துகளை விட வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.