Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

நடிகர் விஜயின் உறவினரான சேவியர் பிரிட்டோ வீட்டில் வருமான வரி சோதனை..!!

 நடிகர் விஜய் உறவினருமான சேவியர் பிரிட்டோ இல்லத்தில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

கெர்ரி இண்டவ் என்ற சரக்கு ஏற்றுமதி, இறக்குமதி கையாளும் நிறுவனத்தை நடத்துகிறார் சேவியர் பிரிட்டோ.. இவர் சமீபத்தில் வெளியான மாஸ்டர் படத்தை தயாரித்தவர்.. விஜயின் உறவினரும் ஆவார்.. இந்நிலையில் சென்னை அடையாறில் உள்ள சேவியர் பிரிட்டோ வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது.. அதாவது, சீன நிறுவனமான xiaomi செல்போன் நிறுவனத்தை சேவியரின் நிறுவனம் கையாளுவதால் ஐ.டி சோதனை நடைபெற்று வருகிறது..

செல்போன் உதிரிபாக தயாரிப்பு நிறுவனம் தொடர்பான வருமான வரி சோதனையில் பிரிட்டோவிற்கும் தொடர்பிருப்பதாக தகவல் வெளியான நிலையில், இந்த சோதனை நடக்கிறது.

நாடு முழுவதும் உள்ள ஷாவ்மி, ஓப்போ உள்ளிட்ட செல்போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்களில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டு வருகிறது.. தமிழகத்தில் 30க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.. சென்னையில் மட்டும் 10க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்று வருகிறது.. வரிஏய்ப்பு புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

டெல்லியிலிருந்து வந்திருக்கக்கூடிய வருமான வரித்துறை அதிகாரிகள் தமிழகத்தில் 30க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தி வருகிறார்கள்.. 50க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..

Categories

Tech |