அமெரிக்காவில் வங்கி வேலையை ஒருவர் விட்டுவிட்டு யூடியூப் மூலமாக மாத வருமானமாக பல லட்சங்களை சம்பாதித்து வருகிறார்.
கலிபோர்னியாவில் உள்ள sanfrancisco நகரில் Ben Chon என்பவர் வசித்து வருகிறார். இவர் பிரபல வங்கி ஒன்றில் முதலீட்டு ஆய்வாளராக வேலை பார்த்து வந்தார். கடந்த 2018-ஆம் ஆண்டு Ben Chon தாய்க்கு உடல்நிலை சரியில்லாமல் போனதனால் அவரால் வேலைக்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் தனது தாயை கவனித்துக்கொள்ள Ben Chon வேலையை விட்டுவிட்டார். இதனையடுத்து அவருக்கு ஒரு யூடியூப் சேனல் தொடங்கலாம் என்று யோசனை வந்தது. இந்நிலையில் Ben Chon கிரிப்டோ கரன்சி முதலீடு குறித்து ஆலோசனை வழங்க ஒரு யூடியூப் சேனலை தொடங்கியுள்ளார்.
அந்த யூடியூப் சேனலில் முதலில் குறைவான நபர்களே பின் தொடர்ந்து உள்ளனர். ஆனால் நாளடைவில் இந்த சேனல் சென்றடைந்த நிலையில் தற்போது இவரை 71 ஆயிரம் பேருக்கு மேல் பின்தொடர்ந்து வருகின்றனர். அதன்பின் கடந்த நவம்பர் மாதம் Ben Chon சுமார் 26 ஆயிரம் டாலர் சம்பாதித்து உள்ளார். அதாவது இந்திய மதிப்பில் சுமார் 17 லட்சம் ரூபாயை அவர் வருமானமாக சம்பாதித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதைதவிர இவருடைய சேனலுக்கு பல ஸ்பான்சர்கள், விளம்பரங்கள் என வருமானத்தை ஈட்டியுள்ளனர். இதுகுறித்து Ben Chon கூறியதாவது,” நான் தற்போது யூடியூப் சேனல் தொடங்கியு உள்ளதால் பல விஷயங்கள் தொடர்பாக என்னால் அறிவுரை வழங்க முடிகிறது. மேலும் எனக்கு பிடித்த வழியில் நான் பணம் சம்பாதிப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என தெரிவித்துள்ளார்.