மாஞ்சோலை தேயிலை தோட்ட பகுதிகளில் ஒற்றை காட்டு யானை சுற்றித் திரிகிறது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மணிமுத்தாறு அருவிக்கு மேலே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் மாஞ்சோலை தேயிலை தோட்டம் அமைந்துள்ளது. இங்குள்ள களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.
இந்நிலையில் வயது முதிர்ந்த யானை ஒன்று மாஞ்சோலை தேயிலை தோட்ட பகுதிகளில் சுற்றித் திரிகிறது. இந்த ஒற்றை யானையால் பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படவில்லை. இந்த யானை உணவுக்காக மட்டும் அங்கு பயரிடப்பட்டிருக்கும் கிழங்கு மற்றும் வாழைகளை எடுத்து செல்கிறது என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.