தென் ஆப்பிரிக்கா நாட்டில் முதல் முறையாக கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து ஒமைக்ரான் என்ற புதிய அவதாரத்தை எடுத்துள்ளது. இது பல உலக நாடுகளில் தீவிரமாக பரவி வருகிறது. இதுவரை 77 நாடுகளில் இந்த ஒமைக்ரான் பரவியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்தவகையில் இந்தியாவிலும் ஒமைக்ரான் தொற்று பரவிவருகின்றது. தற்போது வரை இந்தியாவில் 200க்கும் மேற்பட்டோர் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு பல கட்டுப்பாடுகளை விதிக்க அறிவுறுத்துகின்றது. திருமணம், இறுதி சடங்குகள் நிகழ்வில் குறைந்த அளவு மட்டுமே அனுமதிக்கவேண்டும். பரவலை தடுக்க உள்ளூர் மட்டத்திலேயே நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரிய அளவில் கூடும் கூட்டங்களுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்க வேண்டும். மேலும் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வலியுறுத்தியுள்ளது.