விழுப்புரம் அருகே 13 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கொள்ளுமேடு பகுதியை சேர்ந்த செல்லப்பன் என்பவரின் மகள் மகாலட்சுமி. இவருக்கு வயது 13. இவர் அருகில் உள்ள பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் தொடர்ந்து வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் திடீரென தன் வீட்டில் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்று கூறுகின்றனர்.
சடலத்தை கைப்பற்றிய காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த மாணவி எதற்காக தற்கொலை செய்து கொண்டார். இது கொலையா? தற்கொலையா? என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 13 வயது பள்ளி மாணவி தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.