ஐதராபாத்தை சேர்ந்த அபய்டாங்கே (34), சுப்ரியோ சக்கரவர்த்தி (31) ஆண்களான இவர்கள் இருவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு ‘டேட்டிங்’ வலைதளம் மூலமாக நட்பு ஏற்பட்டது. ஓரினச்சேர்க்கையாளர்களான இவர்களுடைய நட்பு நாளுக்கு நாள் வலுவானது. இதனையடுத்து இவர்கள் இருவரும் திருமணம் செய்ய முடிவு எடுத்தனர். இதுகுறித்து தங்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம் அவர்கள் கூறினார்கள். அதற்கு அவர்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சம்மதம் தெரிவித்தனர். அதன்பின் அவர்கள் இருவருக்கும் ஐதராபாத் புறநகரில் திருமணம் நடைபெற்றது. அப்போது திருமண சடங்குகள் அனைத்தும் பஞ்சாப் மற்றும் வங்க முறைப்படி கலவையாக இருந்தது.
இருவரின் குடும்பத்தினர், உற்றார் உறவினர்கள் மற்றும் நண்பர்கள்களின் வாழ்த்துக்களுடன் திருமணம் கோலாகலமாக நடந்தது. இதனைதொடர்ந்து இருவரும் மோதிரம் மாற்றி உறுதிமொழி எடுத்துக்கொண்டு இல்லற வாழ்வில் இணைந்தனர். இந்த திருமணம் தொடர்பாக சுப்ரியோ சக்கரவர்த்தி கூறியதாவது, “நானும் அபய்டாங்கேயும் 8 ஆண்டுகளுக்கு முன் டேட்டிங் மூலம் சந்தித்தோம். அதன்பின் ஓரினச்சேர்க்கையாளர்கள் ஆனோம். அபய் டாங்கேயை என் தாயிடம் அறிமுகப்படுத்தி எங்களுக்குள் உள்ள உறவை கூறினேன். மேலும் திருமணம் செய்ய போவதாகவும் தெரிவித்தேன். இந்நிலையில் ஆச்சரியப்பட்ட அவர் அவரது முடிவை சொல்ல 2 நாட்கள் எடுத்துக் கொண்டார்.
பின்னர் அவர் எங்களது முடிவை முழு மனதுடன் ஏற்றுக்கொண்டார். எங்களின் இந்த உறவுக்கு பெற்றோர் மிகவும் ஆதரவாக இருந்தனர். தற்போது எனது கணவருடன் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் மத்தியில் அமர்ந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அபய்யை எனது துணைவி என்று அழைப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. உங்கள் அன்புக்குரியவர்கள் உங்களை நேசிப்பது ஒரு ஆசீர்வாதம் ஆகும். ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு குடும்பத்திலுள்ள முக்கியமானவர்களின் ஆதரவு கிடைத்தால் அது எங்களை போன்றவர்களுக்கு வாழ்க்கையில் தன்னம்பிக்கையை தரும்” என்று அவர் கூறினார்.
அம்மா இருவரையும் வீட்டுக்குள் வர சொன்னார். அப்போது என் கணவர் பாலாஜி மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து என்னைக் குத்த முயன்றார். அதை நான் தடுத்தபோது என்னுடைய இடது முழுங்கையில் காயம் ஏற்பட்டது. அதைப்பார்த்த என்னுடைய அம்மா, தடுத்தார். அப்போது உன்னை கொலை செய்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று கூறியபடி அம்மாவை கத்தியால் பாலாஜி குத்தினார். அப்போது அம்மாவை திவ்யானந்த் பிடித்துக் கொண்டார். இதையடுத்து என் கணவரின் நண்பன் திவ்யானந்த், `மச்சி அவ அம்மா செத்துட்டாடா உனக்கு எல்லா பிரச்னையும் சரியாகிவிடும்டா’ என சொன்னான். நான் அம்மாவைப் பார்த்து கதறி அழுதேன். அதன்பிறகு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அம்மாவை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது அங்கு அம்மா இறந்து விட்டதாக கூறினர். என்னுடைய அம்மாவைக் கொலை செய்து விட்டு தப்பி ஓடிய பாலாஜி அவரின் நண்பர் திவ்யானந்த் ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் போலீஸார், 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.